சென்னை: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரவலாக மழை பெய்தது. அதேபோல், அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் ஊத்து பகுதியில் 151 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு பகுதியில் 137 மி.மீ., காக்காச்சி பகுதியில் 120 மி.மீ., மாஞ்சோலையில் 106 மி.மீ. மழை பதிவானது.