தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான ஒரு நல்ல வாய்ப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி – மிகப் பொருத்தமான களம். முற்றிலும் மாநகர பகுதி அல்லது முழு கிராம பகுதியை உள்ளடக்கிய தொகுதி மாற்று அரசியலுக்கு சரியான களமாக இருக்க இயலாது. நகர, கிராம பகுதிகள் இணைந்த ஈரோடு கிழக்கு, புதிய முயற்சிகளுக்கு கச்சிதமாய் பொருந்தும்.
அதிலும், இடைத்தேர்தல் என்பது மாற்று அரசியல் முன்னெடுப்புக்கு கூடுதல் ஆதாயம். இந்த நிலைமையை மேலும் சாதகமாக்க, வலிமை சேர்க்க, நேரடி இரு முனைப் போட்டி அடித்தளமாக உள்ளது. இந்த வகையில் ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். அதற்கு முன், ‘மாற்று அரசியல்’ சாத்தியமா?