சென்னை: தமிழகத்தில் மின்னுற்பத்தி நிறுவு திறன் 3,267 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து வருவதால், அதைப் பூர்த்தி தமிழக மின்வாரியம் தனது மின்னுற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, அனல், நீர், சூரியசக்தி, எரிவாயு மற்றும் காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்னுற்பத்தி நிறுவு திறனை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது அனல்மின் உற்பத்தி நிறுவு திறன் 1,959 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதில் இருந்து 1,709 மெகாவாட் திறன் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.