சென்னை: தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்றன. முகாமில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு கட்சி நிர்வாகிகள் மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்றனர்.
தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை வலிமையாக எதிர்கொள்ளும் வகையில், கட்சியின் உட்கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையோடு, மகளிர் மற்றும் மாணவர் பாசறை இணைந்து தமிழகம் முழுவதும் டிச.29-ம் தேதி ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்படும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.