புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் தீபாவளிக்கு இன்று (அக்.18) முதல் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 20-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. எனவே சனிக்கிழமை ( இன்று ), ஞாயிற்றுக்கிழமை (நாளை) ஆகிய நாட்கள் வார விடுமுறை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி என்பதால் அன்றைய தினம் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.