தருமபுரி: “தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால், இன்று தலைகுனிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாடே அதிர்ந்துவிட்டது” என்று கரூர் நெரிசல் சம்பவம் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தருமபுரியில் இன்று (அக்.2) மேற்கொண்ட பிரச்சாரத்தில் அவர் பேசியது: “கரூரில் செப்டம்பர் 27-ம் நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களை பாதுகாத்திருக்கலாம். முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? இது மக்கள் கேட்கும் குரல்.