சென்னை: மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த ஒரு கும்பல் பொய்யை மட்டுமே பரப்பி வருவதாகவும், ஆனால் தமிழகம் மற்ற மாநிலங்களை போல எதையும் உடனே நம்பாது என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு மாநில அளவிலான 3 நாள் பயிற்சி பட்டறை சென்னையில் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.