சென்னை: தமிழக – கேரள வனப்பகுதிகளில் கடந்த 27 மாதங்களாக தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள் மீது ரயில் மோதி எந்த உயிரிழப்பு சம்பவமும் நடைபெறவில்லை என உயர் நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக – கேரள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி,பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.