சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு கையில் கட்டுடன் வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகையிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரம்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை தினந்தோறும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது வழக்கம். அந்தவகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் அருகே சைக்கிள் ஓட்டியபடி உடற்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக செல்வப்பெருந்தகை சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால், இன்று சட்டபேரவைக்கு வரும்போது, அவரது இடது கையில் கட்டுப்போட்டு வந்தார். இதை பார்த்து எம்எல்ஏக்கள் கையில் என்ன கட்டு, எப்படி அடிப்பட்டது என்று கேட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வந்த போது செல்வபெருந்தகையை பார்த்தார். அப்போது கையில் அடிப்பட்டதை பார்த்து என்ன என்று கேட்டார். உடல் நலனை பார்த்து கொள்ளவும் என்று கூறி நலம் விசாரித்தார்.
The post தமிழக சட்டபேரவைக்கு கையில் கட்டுடன் வந்த செல்வப்பெருந்தகை : முதல்வர் நலம் விசாரிப்பு appeared first on Dinakaran.