விருதுநகர்: “தமிழக அரசின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது. மெட்ரோ திட்டங்கள் போல் பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததாலேயே மாநில அரசுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இருப்பினும் நிதிக் குழு பரிந்துரையின் வரம்பை மீறாமலேயே கடன் பெற்றுள்ளோம்.” என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
“தமிழக அரசு திவாலாகிறது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜன.19) விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.