திண்டிவனம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வேளாண் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
சட்டப்பேரவை கூட்ட தொடரை நூறு நாட்கள் நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் கொடூர கொலைகளை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும். தமிழில் கடைகளின் பெயர் பலகைகள் வைப்பது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்காமல் ஒன்றிய அரசு எதுவும் செய்யாமல் உள்ளது.
இதில் வெளியுறவுத்துறை உறங்கிக் கொண்டிருக்கிறது. மதுரை உயர்நீதிமன்றம் பொது இடங்களில் வைத்த கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டதன் பேரில் அதனை அகற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடுகள், பல்வேறு மாநிலங்களில் சாலைகளின் ஓரங்கள், பாலத்தின் மீது கட்சி விளம்பரங்கள் இல்லை. எனவே தமிழ்நாட்டிலும் இதுதேவையில்லை. சாலைகளும் பாலங்களும் மிளிர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் எதுவும் செய்யாமல் தூங்கும் ஒன்றிய அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.