சென்னை: “புரதச்சத்து மிகுந்த காளான் உற்பத்தியை பெருக்குவதுடன், புதிய தொழில் முனோவோர்களை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளில் ஐந்து காளான் உற்பத்திக் கூடங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும்” என்று வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள விவசாயிகளுக்கான மானியம், ஊக்கத்தொகை தொடர்பான அறிவிப்புகள் இங்கே…