இயக்குநர் ராசய்யா கண்ணன், தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம், ‘பைலா’. சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இலங்கையைச் சேர்ந்த பிரபல நடிகை மிச்சலா இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்குமார், யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘சேஸிங்’ படத்தை இயக்கிய கே. வீரக்குமார் கதை எழுதி இயக்குகிறார். இயக்குநர் விஜி வசனம் எழுதியுள்ளார். சனுகா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிஞர் பொத்துவில் அஸ்வின் எழுதியுள்ளார். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். நீல்கிரிஸ் முருகன் ட்ரீம் என்டர்டெயின்மென்ட் சார்பில் நீலகிரி முருகன் மற்றும் கே.ஆர்.எம் மூவிஸ் நிறுவனம் சார்பில் கே.ஆர்.முருகானந்தம் இணை தயாரிப்பு செய்கின்றனர்.