ஹாக்கி இந்தியா லீக்கில் ஆடவர் பிரிவில் நேற்று ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி – ஹைதராபாத் டூஃபேன்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத் அணி சார்பில் 21-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்டுத்தி கொன்சலோ பெய்லாட் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து அந்த அணியின் வீரர் ஆர்தர் டி ஸ்லூவர் 31-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி அசத்தினார். அடுத்த 2-வது நிமிடத்தில் டிம் பிராண்ட், ஃபீல்ட் கோல் அடிக்க ஹைதராபாத் டூஃபேன்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலையை எட்டியது. இதையடுத்து 48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கொன்சலோ பெய்லாட் கோலாக மாற்றினார்.