சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைப் ஏற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோடை விடுமுறையொட்டி, வரும் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேவேளையில், அந்த காலகட்டத்தில் குடும்ப நல நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் விடுமுறை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு!! appeared first on Dinakaran.