செஸ் நாயகன்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம், இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற வீரர் ஆனார் குகேஷ். நார்வே செஸ் போட்டித்தொடரில் பிரக்ஞானந்தா மூன்றாம் இடத்தைப் பெற்றாலும், உலகளவில் முதலிடம் வகிக்கும் மாக்னஸ் கார்ல்சனை இத்தொடரின் ஓர் ஆட்டத்தில் வென்றதும் ஷ்யாம் நிகில் உலக அளவில் 85ஆம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றதும் தமிழகத்துக்குக் கிடைத்த கூடுதல் பெருமிதங்கள்.
துணை முதல்வர் உதயநிதி: இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி, செப்டம்பர், 2024இல் துணை முதலமைச்சரானார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், இந்தியாவின் முதலாவது இரவு நேர ‘ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா 4 வகை கார் பந்தயத்தைச் சென்னையில் வெற்றிகரமாக நடத்தினார். வெள்ள நிவாரணப் பணிகளிலும் வேகம் காட்டினார். வாரிசு அரசியல் சார்ந்த விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறார்.