சென்னை: தமிழகத்தில் 11ம் தேதி 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வறண்ட வானிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. மேலும், அனேக இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 90 டிகிரி முதல் 101 டிகிரி வரையிலும், தமிழக கடலோரப் பகுதிகளில் சராசரியாக 100 டிகிரி வரையும் வெயில் நீடித்தது. சென்னை மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும். காலையில் லேசான பனி மூட்டம் காணப்படும். 9ம் தேதியும் வறண்ட வானிலை நிலவும். 10ம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் தமிழகத்தி் வறண்ட வானிலை காணப்படும்.
11ம் தேதியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் 8 மற்றும் 9ம் தேதிகளில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.
The post தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.