சென்னை: இன்று (ஜன. 29) – தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை (ஜன. 30) – தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காலை வேளையில் பனிமூட்டம் இருக்கும். தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (ஜன. 31) – தென் தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள் வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 29-01-2025 முதல் 02-02-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
The post தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.