சென்னை : தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யும் முறை விரைவில் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 3.04 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின்வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலித்து வருகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாத மின் இணைப்புகளும் துண்டிக்கப்படுகிறது. பின்னா், அபராதத் தொகையுடன் அதற்கான கட்டணத்தை கட்டிய பின்னா் மின்வாரிய ஊழியா்கள் மீண்டும் இணைப்பை வழங்குவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவது என்ற நடைமுறையை மாற்றி, மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.இதன் எதிரொலியாக 2021 திமுக தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. மாதந்தோறும் மின் நுகர்வை கணக்கீடு செய்யும் முறை 6 மாதங்களுக்குள் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
The post தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யும் முறை விரைவில் அமலுக்கு வருகிறது!! appeared first on Dinakaran.