சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி ஷேக் அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி மோகனச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி சிவசவுந்திர வள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தற்பகராஜை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு appeared first on Dinakaran.