சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை எண்ணூரில் நேற்றிரவு 4 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.