தமிழ்நாடு பாடநூல் கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ் – இந்தோ – ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ‘‘தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, தமிழ் – இந்தோ – ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டம் செயல்படுத்தப்படும்’’ என அறிவிக்கப்பட்டது.