சென்னை: தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் தினம் ஜன. 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் மொழி உரிமைகளுக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.