ஆற்காடு: “தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, பாஜகவில் உள்ள நாங்களும் தமிழர்கள்தான்” என தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று (வியாழன்கிழமை) சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களில் பக்தர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி உள்ளது.