“நெல்லையில் பிறந்த கா.சு.பிள்ளை, சேதுப்பிள்ளை, பூர்ணலிங்கம் பிள்ளை – இந்த மூன்று பிள்ளைகள் இல்லை என்றால் நமக்குத் தமிழே இல்லை.” – அறிஞர் அண்ணா உரை
கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுபிள்ளை இருவரையும் விட மிகவும் வறுமையில் வாடியது பூர்ணலிங்கம் பிள்ளைதான். கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுபிள்ளை இருவரையும் பற்றி ஏராளமான நூல்கள் வந்து விட்டன. ஆனால், பூர்ணலிங்கம் பிள்ளையைப் பற்றிதான் ஒருவரும் சரியாக எடுத்துரைக்கவில்லை.