துபாய்: ஐசிசி கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினார். மேலும், 2-வது இன்னிங்ஸிலும் 40 ரன்கள் சேர்த்தார்.