வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே தனியார் நிலங்களில் பற்றி எரிந்த காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சேனன்கோட்டை பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலம் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த நிலத்தில் புற்கள், செடி, கொடிகள் ஏராளமாக வளர்ந்து இருந்தன. தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் அவை அனைத்தும் காய்ந்து கருகின. இந்நிலையில், நேற்று மதியம் எதிர்பாராத விதமாக அப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 2 ஏக்கரில் இருந்த காய்ந்த புற்கள் கருகி சாம்பலாகின. சிகரெட், பீடி குடிப்பவர்கள் அதை அணைக்காமல் தூக்கி வீசுவதால் இதுமாதிரியான தீவிபத்து ஏற்படுவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
The post தரிசு நிலத்தில் பற்றி எரிந்த காட்டுத்தீ: வேடசந்தூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.