சென்னை: தருமபுரியில் தந்தத்துக்காக யானை எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன் ஒரு முறையீடு செய்தார். “தமிழக – கர்நாடக எல்லையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் ஏமனூர் அருகே சிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த மார்ச் 1-ம் தேதியன்று யானை ஒன்று கொடூரமாக கொல்லப்பட்டு தும்பிக்கை தனியாகவும், உடல் தனியாகவும் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.