சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தில் அமைந்துள்ள பனகல் பூங்காவில், தரையில் இருந்து 16 மீட்டர் ஆழத்தில் பிரம்மாண்ட மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒன்றான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி (26 கி.மீ.) 4-வது வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது.