ஹவானா: வறுமையில் வாடும் சொந்த நாட்டு மக்களை பிச்சைக்காரர் வேடம் போட்டவர்கள் என்று பேசிய கியூபா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய கியூபா, தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. உணவு பஞ்சம், மருந்து தட்டுப்பாடு, வேலையின்மை, வறுமை போன்ற பிரச்சனைகளை மக்கள் அல்லாடுகிறார்கள்.
ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மாதம் வெறும் 430 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக பெறுவதாகவும், அது தினமும் ஒரு முட்டை வாங்குவதற்குட போதாது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. வறுமை காரணமாக மக்கள் சுயமரியாதை இழக்கும் வேலைகளை செய்வதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்து நாடாளுமன்றத்தில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மார்டா எலினா, கியூபாவில் பிச்சைக்காரர்கள் இல்லை.
அவர்கள் பிச்சைக்காரர்கள் போல் வேஷம் போட்டவர்கள். சிலர் கண்ணாடி துடைக்கும் வேலை செய்து அந்த பணத்தை மது வாங்குவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார். அவரது பேச்சில் மக்கள் இடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கிய நிலையில், கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்யில் அவரை பயங்கரமாக கண்டித்ததுடன் பதவி விலக கூறினார். இதனை தொடர்ந்து மார்டா எலினா ராஜினாமா செய்துள்ளார்.
The post தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது கியூபா: மக்களின் வறுமையை கொச்சைப்படுத்திய கியூபா அமைச்சர் பதவி பறிப்பு appeared first on Dinakaran.