ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது திமுக ஆட்சி. கடந்த நான்காண்டுகளில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிரணிக் கட்சிகள் ஆட்சிக்கு எதிராக அள்ளித் தூற்றுகின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளோ, “சொன்னதைச் செய்திருக்கிறது திமுக… இன்னும் செய்ய வேண்டிய காரியங்களும் இருக்கின்றன” என பட்டும் படாமல் ஆட்சிக்கு ஈயம் பூசுகின்றன. இந்த நிலையில், திருப்திகரமான ஆட்சியைத் தந்திருக்கிறதா திமுக, இந்தியா – பாகிஸ்தான் போர் உள்ளிட்டவை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக உருவான இந்தியா – பாகிஸ்தான் போர் சூழல் குறித்து..?