மதுரை: “ஆட்சியில் இருந்த பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோதே செல்லவில்லை. அப்படியிருக்கும்போது தவெக – நாம் தமிழர் கூட்டணி சரியாக வராது,” என மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரையில் தென் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று (பிப்.19) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: “தமிழகத்தில் முதலில் இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லாமல் இருந்தது.