இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை ஆய்வு செய்திட, அங்கு பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறக்க உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கை, அலகதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த கோரிக்கை நியாயமற்றவை. இத்தகைய பிரச்னை கல்வியாளர்கள், அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் விவாதத்திற்கு விடப்பட வேண்டியவை என்றனர்.
நோ ரகசியம்
தாஜ்மஹாலின் அடித்தளத்தில் இருப்பதாக கூறப்படும் 22 அறைகள், உண்மையில் அறைகள் கிடையாது. அவை, ஒரு நீண்ட வளைவு நடைபாதையில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது மட்டுமே ஆகும் என அடித்தள பகுதியை பலமுறை பார்வையிட்ட இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தாஜ்மஹாலில் உள்ள ASI ஊழியர்கள் வாரந்தோறும் அல்லது பதினைந்து வாரங்களுக்கு ஒருமுறை “அறைகளை” சுத்தம் செய்கிறார்கள். அங்கிருக்கும் சுவர்களில் எதுவும் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ASI அதிகாரி ஒருவர் கூறுகையில், 22 அறை இருப்பதாக கூறப்படும் பகுதியை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு பிடிக்கவில்லை. தினசரி 1 லட்சம் பேர் பார்வையிடும் உலகப் பாரம்பரியத் தளத்தில் தேவையற்ற மக்கள் நடமாட்டதை தடுக்கவே பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
அடித்தளத்தில் எந்த ரகசிய வரலாறும் இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே அந்த பகுதி பார்வையாளர்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
தாஜ்மஹால் கட்டிடக்கலை
ASI இன் பிராந்திய இயக்குனராக (வடக்கு) 2012 இல் ஓய்வு பெற்ற புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் கே கே முஹம்மது தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸூக்கு கூறியதாவது, தாஜ்மஹாலின் அடித்தள அறைகளுக்குள் எந்த மத அடையாளங்களையும் காணவில்லை. ஆக்ராவிலும், டெல்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறையிலும், சப்தர்ஜங்கின் கல்லறையிலும், இதுபோன்ற அறைகள் மற்ற முகலாயர் கால கட்டமைப்புகளில் அரிதான ஒன்றாகும்.
அனைத்து அடித்தள அறைகளையும் ASI பராமரிக்கிறது. அந்த சுவர்களில் எதுவும் மறைக்கப்படவில்லை. எவ்வித அடையாளங்களும் இல்லை. பிரதான கல்லறை மற்றும் மினாரட்டுகள் நிற்கும் பீடத்தை தாங்கி பிடிப்பதற்காகவே அங்கு சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ASI இன் ஆக்ரா வட்டத்தைச் சேர்ந்த அதிகாரி கூறியதாவது, இத்தகைய பிரமாண்ட கட்டிதத்திற்கான அடித்தளத்தை அமைத்து முடிதத்தும், தளத்தை உயர்த்தவும், வெயிட்டை ஒரே சீராக பராமரிக்கவும் வளைவுகள் உருவாக்கப்படுகின்றன.தாஜ்மஹாலின் உறுதியை சோதிக்க அவ்வப்போது அடித்தளத்தில் ஆய்வு நடத்தப்படுவது உண்டு என்றார்.
தாஜ்மஹால் இந்துக்கோயிலா?
தாஜ்மஹால் உண்மையில் ஒரு இந்துக் கோயில் என்றும், அதன் அடித்தளத்தில் கடவுள்கள், தெய்வங்களின் சிலைகள் மறைக்கப்பட்டிருப்பதாக பல ஆண்டுகள் உரிமை கோரப்பட்டு வருகிறது. இத்தகைய கூற்றுகளை, வரலாற்றாசிரியர்கள், ஏஎஸ்ஐ அதிகாரிகள் மற்றும் உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன
ஷாஜகானின் ஆட்சிக் காலத்தின் அதிகாரபூர்வ வரலாற்றான பாத்ஷாநாமாவில் தாஜ்மஹால் முதன்முதலில் குறிப்பிடப்பட்டதாக முகமது கூறினார்.
மேலும், அதன் கட்டிடக்கலை அம்சங்கள் வரலாற்று ரீதியாக அதற்கு ஒதுக்கப்பட்ட காலத்திற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்க முடியாது. அது, முகலாய கட்டிடக்கலை வளர்ச்சியடைய வழிவகுத்தது. அச்சமயத்தில் பல முகலாய கட்டமைப்புகளில் இருந்த டபுள் டோம், இன்லேஸ்(inlays), ஜாலிஸ் (jaalis) எடுத்துக்கொள்கிறது.