மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மாம்பாக்கத்தில் இருந்து கீழ் மருவத்தூர் வரை செல்லும் வீராணம் கால்வாய் தார்ச்சாலை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் பாக்கம் ஊராட்சியில் உள்ள தாதங்குப்பம் பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு சாலை சீரமைக்கப்படாமல் விட்டுவிட்டனர். இதனால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்கின்றவர்கள் என பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கண்ட சாலை மிகவும் சேதம் அடைந்துவிட்டது. இதனால் பைக், சைக்கிள்களில் செல்கின்றவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கூறும்போது, ‘‘எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட தாதங்குப்பம் கிராம மக்கள் பயன்படுத்தக்கூடிய முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது. ஆனால் அதிகாரிகள் குறிப்பிட்ட இந்த பகுதியில் மட்டும் தார்ச்சலையை அமைக்காமல் விட்டு சென்றுள்ளனர். இதனால் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் மதுராந்தகம் நகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
The post தாதங்குப்பம் மக்கள் எதிர்பார்ப்பு: அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ள தார்ச்சாலை பணி முடிக்கப்படுமா? appeared first on Dinakaran.