மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு, தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள், மண்டபங்களை சீரமைக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும் கோரி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணியில் கழிவுநீர் கலந்தால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.