சென்னை: சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆம்னி பஸ்களும் தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு தனி இடம் வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து ஆம்னி பேருந்து ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று, வண்டலூர் வெளிவட்டச் சாலை முடிச்சூர் அருகே, 5 ஏக்கா் பரப்பில் ஒரே நேரத்தில் 117 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு ரூ.42.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் ஓட்டுநா்கள், கிளீனா்கள் என 100 போ் தங்கும் அளவுக்கு இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
The post தாம்பரம் அடுத்த முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிறுத்தம்: காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.