தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் 2025-26ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் முன்னிலையில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மண்டல தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, ச.ஜெயபிரதீப், நியமன குழு உறுப்பினர் பெருங்கொளத்தூர் சேகர், கல்வி குழு தலைவர் கற்பகம் சுரேஷ், நகரமைப்பு குழு தலைவர் மாடம்பாக்கம் ஆ.நடராஜன், எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையை நிதி குழு தலைவர் ரமணி ஆதிமூலம், மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஆகியோரிடம் சமர்ப்பித்தார்.
இதில் இடம்பெற்றுள்ள புதிய அறிவிப்புகள் – முக்கிய அம்சங்கள்:
* அடுத்த 5 ஆண்டுகளில் ரூ4 கோடியில் 5 மண்டலங்களில் பசுமை புல்வெளி விளையாட்டு திடல்கள்.
* மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் ரூ3 கோடியில் சோலார் பேனல்கள்.
* மாணவர்களுக்கு ரூ3 கோடியில் அதிநவீன படிப்பகம்.
* பூங்காக்களில் ரூ3.74 கோடியில் உடற்பயிற்சி கூடங்கள்.
* ரூ4 கோடியில் நவீன உணவகம் (புட் ஸ்ட்ரீட்).
* பிரதான சாலைகளில் ரூ3 கோடியில் நவீன வசதிகளுடன் பேருந்து நிறுத்தங்கள்.
* ஏரிகள் புனரமைத்தலுக்கு ரூ10 கோடி.
* தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ10 கோடியில் பலஅடுக்கு வாகன நிறுத்தம்.
* மேம்பாலங்களில் ரூ3.30 கோடியில் மின் விளக்குகள் மற்றும் அலங்காரச் செடிகள்.
* அம்பேத்கர் திருமண மண்டபம் ரூ6.50 கோடியில் சீரமைக்கப்படும்.
* புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் திட்டம், குடிநீர் ஆதாரம் புனரமைப்புக்கு ரூ27.60 கோடி ஒதுக்கீடு.
* தெரு விளக்குகளுக்கான கட்டுப்பாட்டு கருவி பொத்தும் பணிக்கு ரூ5.50 கோடி ஒதுக்கீடு.
* மாநகராட்சி பள்ளிகளில் ரூ1 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.
* ரூ5.50 கோடியில் எல்பிஜி எரிவாயு தகனமேடைகள்.
* ரூ1 கோடியில் பூங்காக்கள் புனரமைக்கப்படும்.
* மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையை ரூ10 கோடியில் ஸ்மார்ட் சாலையாக மாற்றி அமைக்கப்படும்.
* வெள்ளநீர் தேங்கும் இடங்களில் ரூ1 கோடியில் ஸ்பாஞ்ச் பூங்கா.
* ரூ25 லட்சத்தில் நடமாடும் வரி வசூல் வாகனம்.
எ ரூ2 கோடியில் செல்ல பிராணிகள் மற்றும் சமூக விலங்குகளுக்கான எரிவாயு தகனமேடை.
* 5வது மண்டல அலுவலகத்திற்கு ரூ5 கோடியில் புதிய கட்டிடம்.
* ரூ50 லட்சத்தில் நவீன மற்றும் மின்னணு முறையில் இயங்கும் கழிப்பறை.
* 5 மண்டலங்களில் உள்ள டிஎஸ்ஆர் இடங்களில் ரூ10 கோடியில் புதிய பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்.
* 5 மண்டலங்களிலும் ரூ5 கோடியில் கோட்ட அலுவலகங்கள்.
* ரூ5 கோடியில் அறிவியல் பூங்கா.
* மகளிருக்கு ரூ1 கோடியில் பிங்க் பூங்கா.
* மாநகராட்சி சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் நவீன முறையில் தாம்பரம் மாநகராட்சிக்கென புதிய வலைத்தளம் ரூ20 லட்சத்தில் உருவாக்கப்படும்.
* குழந்தைகள் சாலை விதிகள் மற்றும் சாலை ஒழுங்குமுறைகளைக் கற்றுக்கொள்ளும் நோக்கில் ரூ1 கோடியில் போக்குவரத்து பூங்கா உருவாக்கப்படும்.
* ஜமீன் ராயப்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் ரூ30 லட்சத்தில் அதிநவீன ஆய்வகம்.
* ரூ3 கோடியில் நடவாய் ஓடையில் சிறுபாலங்கள் கட்டப்படும்.
* மண்டலம் 4ல் உள்ள மைய அலுவலகத்தில் ரூ30 லட்சத்தில் மின் தூக்கி.
* 5 மண்டல அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உடற்பயிற்சி கூடம் ரூ5 கோடியில் அமைக்கப்படும்.
* பொதுமக்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்க எல்இடி திரை ரூ50 லட்சத்தில் அமைக்கப்படும்.
* சாலையில் திரியும் மாடுகளை பிடித்து மண்டலம் 5ல் உள்ள ராஜம்மாள் நகர் பகுதியில் ரூ1 கோடியில் பவுண்ட் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
* திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ50 லட்சத்தில் 5 மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்படும்.
* ரூ50 லட்சத்தில் 5 மண்டலங்களில் உள்ள 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 9 நகர்ப்புற நல வாழ்வு மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.
* கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிக்கு ரூ30 லட்சத்தில் 5 கம்பிரஸ்சர் இயந்திரங்கள்.
* அலுவலர்களுக்கு ரூ1 கோடியில் பொலிரோ வாகனங்கள்.
* சாலையில் திரியும் கால்நடைகளை பாதுகாப்பாக பிடித்து கோசாலையில் விடுவதற்கு ரூ60 லட்சத்தில் வாகனங்கள்.
* பசுமை உரக்குடியில் இருந்து உருவாகும் உரம் விற்பனை செய்வதற்கு 5 மண்டலங்களிலும் ஸ்டால் மற்றும் 1 உரசேமிப்பு கிடங்கு ரூ20 லட்சத்தில் அமைக்கப்படும்.
* மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சு திறன் ஏற்படுத்துவதற்கு 22 தனிவெளிக்கொணர்வு ஆசிரியர்களுக்கு ரூ10 லட்சம் ஒதுக்கீடு.
* மாநகராட்சி பள்ளிகளில் ரூ30 லட்சத்தில் சிசிடிவி கேமரா.
* மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ3 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகை.
* பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்துவதற்கு ரூ30 லட்சம் ஒதுக்கீடு.
* பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை மற்றும் இலக்கியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரூ3 கோடியில் மேற்கொள்ப்படும்.
* தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணிக்கு ரூ4 கோடியில் கருத்தடை சிகிச்சை மையம்.
* மாநகாட்சி பள்ளி மாணவர்களுக்கு மனவளர்ச்சி பயிற்சி முகாம்கள் நடத்திட ரூ10 லட்சம் ஒதுக்கீடு.
* மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்தும் வகையில் ரூ50 லட்சத்தில் ரோபார்ட்டிக்ஸ் வகுப்புகள்.
* மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளை கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஊக்கப்படுத்திட சிறப்பு வகுப்புகள் மேற்கொள்ளவதற்கு ரூ30 லட்சம் ஒதுக்கப்படும்.
* ரூ20 லட்சத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையம்.
* மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கிட ரூ20 லட்சம் ஒதுக்கீடு.
* தூய்மை பணியாளர்களது குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ரூ30 லட்சம் ஒதுக்கீடு.
* மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளித்திட ரூ20 லட்சம் ஒதுக்கீடு.
* ரூ25 லட்சத்தில் தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் காலிமனை பிரிவுகளை பறக்கும் கேமராக்கள் (ட்ரோன் கேமரா) மூலம் சர்வே செய்து அதனை கணிணியில் பதிவேற்றம் செய்யப்படும்.
* மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில், ரூ2 கோடியில் தடுப்பு வேலிகள்.
* சாலைகள், பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பு செய்திட ரூ2 கோடி ஒதுக்கீடு.
* மாநகரட்சியில் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள பொருட்களை அகற்றுவதற்கு தேவையான வாகனம் ரூ2.5 கோடியில் கொள்முதல்.
* மாநகராட்சியின் விவரங்கள் மற்றும் சேவைகள் குறித்து நவீன காலத்திற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களின் கைபேசி மூலம் எளிதில் அனைத்து விவரங்களையும் அறியும் வகையில் வாட்ஸ் ஆப் சாட் போர்ட் என்ற செயலி ரூ20 லட்சத்தில் உருவாக்கப்படும்.
* மாநகராட்சிக்குட்பட்ட பொது இடத்தில் ‘நம்ம தாம்பரம் என்ற செல்பி பாயின்ட் பலகை ரூ30 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.
* மாநகராட்சி அலுவலங்கள், மைய அலுவலகம் மற்றும் கணிணி வரி வசூல் மையங்களில் அதிநவீன வைபை ஹாட்ஸ்பாட் உருவாக்க ரூ1 கோடி.
* மாநகராட்சியின் சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியபடுத்திடும் யூ டியூப் சேனல் உருவாக்கப்படும்.
* மாநகராட்சியில் நடத்தப்படும் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள், கலந்தாய்வு கூட்டங்களுக்கு தேவைப்படும் ட்ராலி ஸ்பீக்கர், மைக் ரூ25 ஆயிரத்தில் கொள்முதல் செய்யப்படும்.
* அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திறப்பு விழாக்களுக்கு தேவையான ஒளிபதிவு கருவிகள் ரூ2 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.
* மாமன்ற உறுப்பினர்களுக்கான வார்டு அலுவலகம் ரூ5.25 கோடியில் கட்டப்படும்.
* போக்குவரத்து நெரிசல் உள்ள முக்கிய பிரதான சாலைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் டிராபிக் சிக்னல்கள் ரூ50 லட்சத்தில் அமைக்கப்படும்.
* பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளால் சேதமடையும் சாலைகளை மறுசீரமைக்க ரூ40 கோடி.
* மழைக்காலங்களில் வெள்ளநீர் வெயேறும் வகையில் ரூ35 கோடியில் வடிகால்கள்.
* தாம்பரம் மற்றும் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடைகள் ரூ12 கோடியில் அமைக்கப்பபடும்.
* மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு செஸ், பேட்மிண்டன் மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சி வகுப்புகள் ரூ30 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
* சிட்லப்பாக்கம் ஏரியில் படகு சவாரி, பசுமை புல்வெளி விளையாட்டு அரங்கம், புட் கோர்ட் மற்றும் சுற்றியுள்ள பூங்காவை அபிவிருத்தி மற்றும் ஆண்டு பராமரிப்பு ரூ2.68 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சியாக இருந்த காலத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளை மாற்றிடும் நோக்கில் புதிய தெரு பெயர் பலகைகள் ரூ9.78 கோடியில் அமைக்கப்படும்.
* அலுவலர்கள் மற்றும் வெளிபுற பணியாளர்களுக்கு ரூ45 லட்சத்தில் வாக்கி டாக்கி. உள்ளிட்ட ரூ1082 கோடியில் 71 புதிய திட்ட பணிகள் இடம்பெற்று இருந்தன.
The post தாம்பரம் மாநகராட்சியில் 2025-26ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ1082 கோடியில் 71 புதிய திட்ட பணிகள்: நிதி குழு தலைவர் வெளியிட்டார் appeared first on Dinakaran.