சென்னை: ஹஜ் பயணத்தினை நிறைவு செய்து தாயகம் திரும்பிய ஹஜ் புனிதப் பயணிகளை விமான நிலையத்தில் நேற்று அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வரவேற்றார். ஹஜ் பயணத்தினை நிறைவு செய்து சவூதியா விமானம் மூலம் தாயகம் திரும்பும் முதல் விமான ஹஜ் புனிதப் பயணிகளை, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலர் மு.அ.சித்திக் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வரவேற்றனர். முதல் விமானப் பயணிகள் ஆண்
கள் – 200, பெண்கள் – 201 என மொத்தம் – 401 பேர் இருந்தனர்.
ஜூலை 9 ம் தேதி வரை தாயகம் திரும்பும் பயணிகள் 14 சவூதியா விமானங்கள் மூலம் சென்னை வந்தடைய உள்ளனர். இதில் தமிழ் நாட்டைச் சார்ந்த 5430 பயணிகளும், புதுச்சேரியை சேர்ந்த 59 பயணிகளும், அந்தமான் நிகோபார் தீவை சேர்ந்த 111 பயணிகளும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 4 பயணிகளும், பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 பயணிகளும், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 8 பயணிகளும், 8 என மொத்தம் 5614 பயணிகள் தாயகம் திரும்ப உள்ளனர்.
The post தாயகம் திரும்பிய ஹஜ் பயணிகள்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வரவேற்றார் appeared first on Dinakaran.