பாங்காக்: தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்து அரசு கடந்த வருடம் ஒப்புதல் வழங்கியது. இந்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் தென்கிழக்காசிய நாடு என்ற பெருமையைத் தாய்லாந்து பெற்றுள்ளது. ஆசிய நாடுகளில் தைவானும் நேபாளமும் ஏற்கெனவே அத்தகைய திருமணங்களை அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில் தாய்லாந்தில் நேற்று மட்டும் 300 தன்பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
The post தாய்லாந்தில் தன்பாலின திருமண சட்டம் அமல் appeared first on Dinakaran.