*துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்
தாராபுரம் : தாராபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் மினி உள் விளையாட்டு அரங்கு அமைக்கும் பணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் எதிர்புறம் 7 ஏக்கரில் இளைஞர் நலன், மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மினி உள் விளையாட்டு அரங்கம் ஒன்றை ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தாராபுரம் உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார், விளையாட்டு அரங்கில் 400 மீட்டர் சுற்றளவு உள்ள தடகள ஓடு பாதை,பல்நோக்கு விளையாட்டு அரங்கம், வாலிபால், கால்பந்து ,கூடைப்பந்து,கோகோ,விளையாட்டுகளுக்கான அரங்கங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான அரங்கங்கள் கட்டப்பட உள்ளன.இதில் விளையாட்டு வீரர்களுக்கான கழிவறைகள்,உடை மாற்றும் அறைகள்,பார்வையாளர்களுக்கான கழிவறைகள் கட்டப்பட உள்ளன.
தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்டிஒ பெலிக்ஸ் ராஜா தலைமையில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவர் இல. பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து இறகுப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
இதுகுறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில்:திருப்பூர் கலெக்டர் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஸ்டார் அகாடமி என்ற இறகு பந்து அகாடமி துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கான பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 11 மாத கால அடிப்படையில் பயிற்றுநருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இதன் பயிற்றுநர்கள் மற்றும் உடல்கல்வி ஆசிரியர்களை கொண்டு 20 வீரர்கள் 20 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பல்நோக்கு விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு காலை மாலை உரிய தரத்தில் பயிற்சிகள், சத்தான உணவுகள் விளையாட்டுகளுக்கு உரிய சீருடைகள், காலணிகள் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
எனவே திருப்பூர் மாவட்ட ஸ்டார் இறகு பந்து பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வீரர் வீராங்கனைகள் விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தினை பயன்படுத்தி தங்களது விளையாட்டு பயிற்சியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறுஅமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.இதற்காக விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ள பகுதியில் ஸ்டார் அகாடமி என்ற இறகு பந்து விளையாட்டுப் பயிற்சி மையமும் துவக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில் குமார், நகர் மன்ற தலவர் பாப்புகண்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார்,கருணாகரன், செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ்,நகர அவைத்தலைவர் கதிரவன், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், தாராபுரம் இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, குளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அன்பழகன் உட்பட நகர ஒன்றிய திமுகவினர், அரசு அலுவலர்கள், விளையாட்டு துறை அலுவலர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தாராபுரத்தில் ரூ.3 கோடியில் மினி உள் விளையாட்டு அரங்கம் appeared first on Dinakaran.