
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’. மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இதில், நடிகர் ரஜினி கிஷன் பேசியதாவது: “இது எனது மூன்றாவது படம். ஏற்கனவே இரண்டு படம் செய்துவிட்டேன். மக்கள் மனதில் பெரிய ஹீரோவாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதற்காகத் தான் கதை கேட்டேன். ரமேஷ் பாரதி மூன்று கதை சொன்னார், அவரே இந்தக்கதை செய்யுங்கள், காமெடி மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். முதலில் நாமே தயாரித்தும், நடிக்கவும் வேண்டுமா? என யோசித்தேன், பிறகு நாமே தயாரித்து விடலாம் என முடிவு செய்து படத்தை ஆரம்பித்து விட்டோம்.

