சென்னை: “புலி மாதிரி விஜய் அமைதியாக செயல்பட்டு வரும் போது சம்பந்தமே இல்லாமல் ஒரு ஆடு வந்து தலையிடுகிறது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தவுடன் தவெகவுக்கு எதிராக திமுக பெரிய கட்டமைப்பை உருவாக்கினார்கள். அதன் ஒரு பகுதியாக திமுகவின் 'பெண்' நிறுவனமானது ஐபேக் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஐபேக் நிறுவன அதிகாரி ரிஷி முழுக்க முழுக்க பாஜகவுக்காக செயல்பட்டவர். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் எங்களுக்கும் அரசியல் தெரியும்.