திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க 8 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.திண்டுக்கல் நகராட்சி 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இன்று வரை 48 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதன் பின் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்து வந்தது.
சமீபத்தில் திண்டுக்கல் மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தும் வகையில் 8 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, குரும்பப்பட்டி உள்பட 8 ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த வருகின்றனர்.
கிராம மக்களில் கூறுகையில், திண்டுக்கல் நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சி பகுதியில் விவசாய தொழிலை ஆதாரமாக கொண்டு தினக்கூலி செய்தும் வாழ்கின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியுடன் 8 ஊராட்சிகளை இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு கிடைக்காது.
வீடுகட்டும் திட்டம், விவசாய நிலங்களுக்கு ஊக்கத்தொகை, மகளிர் சுய உதவி கடன் பாதிக்கப்படும். இதை கருதி ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என தெரிவித்ததுடன் 8 ஊராட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
The post திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க 8 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.