புதுடெல்லி: திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் திமுக எம்பி ச.முரசொலி மனு அளித்துள்ளார்.
இது குறித்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி இன்று டெல்லியில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து அளித்த மனுவின் விவரம்: திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக தினசரி இயக்க வேண்டும். இந்த ரயிலால் பொதுமக்களுக்கு அதிக பலன் உள்ளது. தாம்பரம் – ராமேஸ்வரம் ரயிலினை பட்டுக்கோட்டை, பேராவூரணி வழித்தடத்தில் இயக்கிட வேண்டும்.