தங்கம் விலை தினமும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.63,240-க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.