சென்னை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்ற 309-வது வாக்குறுதி, 70 வயது முடிந்ததும் 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற 308-வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீண்டநாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அளவில், மாவட்டளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.