சென்னை: “திமுக என்றாலே டிராமா கம்பெனி, நாடக கம்பெனி என்றுதான் சொல்வோம். வேங்கைவயல் நிகழ்வுக்கு தமிழக காவல் துறை எழுதியிருக்கும் திரைக்கதை வசனம், கருணாநிதி எழுதக் கூடிய வசனத்தை மிஞ்சக்கூடிய வகையில் இருக்கிறது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருப்பூரில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக, என்றாலே டிராமா கம்பெனி, நாடக கம்பெனி என்று தான் சொல்வோம். தற்போது வேங்கைவயல் நிகழ்வுக்கு தமிழக காவல் துறை எழுதியிருக்கும் திரைக்கதை – வசனம், கருணாநிதி எழுதக் கூடிய வசனத்தை மிஞ்சக்கூடிய வகையில் இருக்கிறது.