கோவை: மாநிலங்களவை தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதில் தொடர்புடைய, துணை முதல்வரின் நண்பர்களான ரிதீஸ், ஆகாஷ் ஆகியோரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. அவர்கள் ஏன் பயந்து வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும்?