சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, கீழ் பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துணை கிராமங்களில் நியாய விலைக்கடைகள் இல்லாத காரணத்தில் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. கீழ் பென்னாத்தூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு முன்வர வேண்டும் “ என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், “ நியாய நியாயவிலைக்கடைகளை தொடங்க அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சியமைந்த பின் இதுவரை மூவாயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. உறுப்பினர் பிச்சாண்டியின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்” என்றார்.
The post திமுக ஆட்சியமைந்த பின் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரேசன் கடைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.