சென்னை: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார் நயினார் நாகேந்திரன் என விசிக தலைவர் திருமாளவளவன் குற்றசாட்டு வைத்துள்ளார். திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது என செய்தியாளர்களுக்கு இதற்கு முன்பு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். நாங்கள் இந்த கூட்டணியில் தான் இருப்போம். முடிந்தவரை கூடுதல் இடங்களை பெற முயற்சிப்போம். திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியறே வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று அவர் அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த நயினார் நாகேந்திரன் முயற்சிக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே அதற்கான ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்த முறை கூடுதல் தொகுதிகளை எப்படியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
மதச்சார்பின்மையை காப்போம் என்பதை வலியுறுத்தி நாளை வி.சி.க. சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இஸ்லாமியர் சொத்து விவகாரத்தில் வெளிப்படையாக ஒன்றிய அரசு தலையிடுவது மதச்சார்பின்மைக்கு எதிரானது. தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை கட்டவிழ்த்தனர். தற்போது தமிழ்நாட்டிலும் வெறுப்பை கட்டவிழ்த்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்கிறது. முருகன் மாநாடு நடத்துகின்றனர்; கடவுள் நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துகின்றனர்.
The post திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார் நயினார் நாகேந்திரன்: திருமாளவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.